குரூப்-2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு! – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

Default Image

முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்.

குரூப்-2, 2A முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை, டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. கடந்த மே 21-ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி வெளியானது.

இதில், தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வரும் 16-ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பதிவு செய்துகொள்ளலாம். அதற்காக கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது எனவும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800 425 2911 -ஐ தொடர்பு கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்