தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம்!சைக்கிள் சின்னத்தை வழங்க மறுப்பு

this news given information Auto Rickshaw Logo to TAMIL MANILA Congress Party

தேர்தல் ஆணையம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-தேமுதிக -புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள  தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.தஞ்சை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர்.நடராஜன்  வேட்பாளராக போட்டியிடுகிறார்.

unknown node

தற்போது தேர்தல் ஆணையம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு  சைக்கிள் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இரண்டு இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.இதனால் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி என்பதால் சைக்கிள் சின்னத்தை இழந்துள்ளது.