ராஜேந்திர பாலாஜியை பிடிக்க பெங்களூரு விரைந்தது தனிப்படை!

Private rushed to Bangalore to arrest former AIADMK minister Rajendra Balaji.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய பெங்களூரு விரைந்தது தனிப்படை.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய பெங்களூரு விரைந்தது தனிப்படை காவல்துறையினர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ராஜேந்திர பாலாஜி பெங்களுருவில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தனிப்படை விரைந்துள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே, ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணையை தனிப்படை தீவிரப்படுத்தியுள்ளது. மதுரையில் ஆவின் முன்னாள் மேலாளரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்றும் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது தனிப்படை பெங்களூரு விரைந்துள்ளது.