முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

டாஸ்மாக் ஊழல் முறைகேட்டில் முதல் குற்றவாளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

TN CM MK Stalin - BJP State president Annamalai

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பாஜக சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்டது. இதனால் முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்ட பல்வேறு பாஜக மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பாஜக நிர்வாகி வினோஜ் பி.செல்வம், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போது நாங்கள் தேதி முன்னரே கூறிவிட்டதால் எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வருகிறீர்க்ள். ஆனால், அடுத்த 6 மாதம் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். தேதி குறிப்பிடாமல் போராட்டம் நடத்துவோம்.

வரும் மார்ச் 22ஆம் தேதி கூட போராட்டம் நடைபெறலாம். எங்கு எப்போது போராட்டம் நடத்த உள்ளோம் என்பதை நாங்கள் கூற மாட்டோம். உங்களை போல நாங்களும் அரசியல் செய்வோம். டாஸ்மாக் அலுவலகம் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும், ஏன் முதலமைச்சர் வீட்டை கூட நாங்கள் முற்றுகையிடுவோம். நாங்கள் போராட்டம் நடத்தப்போவது யார் வீடாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதி செந்தில் பாலாஜி.  என்னைப்பொறுத்தவரை இந்த டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். ஏனென்றால் இவர் தலைமையில் கீழ் உள்ள அமைச்சர் துறையில் தான் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. 2வது குற்றவாளி தான் செந்தில் பாலாஜி. டெல்லியில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது போல மு.க.ஸ்டாலினும் கைதுசெ செய்யப்படுவார் என பரபரப்பாக பேட்டியளித்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

கானாத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்து அண்ணாமலை எழும்பூருக்கு போராட்டதிற்கு செல்லும் போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தனது கருத்துக்களை தெரிவித்தார். அதன் பிறகு போராட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் பாதி வழியில் தடுத்து நிறுத்தபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Rajasthan Royals vs Mumbai Indians
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings