பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும் – நடிகை குஷ்பு

Actress Khushbu has said that the BJP will have a huge success in Tamil Nadu in 2021 following the completion of the Velayathra.

வேலயாத்திரை நிறைவடைந்ததை தொடர்ந்து, 2021-ல் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருமாதமாக பாஜக சார்பாக நடைபெற்று வந்த வேல் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவுபெற்றது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும், எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்றது. தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

மழை மற்றும் புயலால் நிறுத்தப்பட வேல்யாத்திரை மீண்டும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குக்கும் வேல் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்.

வேலயாத்திரை நிறைவுபெற்றதை தொடர்ந்து 2021-ல் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் பாஜகவுக்கு இவ்வளவு ஆதரவு இருக்கின்றதா என அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வேல் யாத்திரை அமைந்துள்ளது. இது வெற்றியின் தொடக்கம் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.