#BREAKING: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

AIADMK members have walked out of the assembly claiming they were denied the opportunity to speak.

பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை திமுக முடக்கி வைத்திருப்பதாக அதிமுக புகார் தெரிவித்த நிலையில், பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றசாட்டி, அங்கிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதனிடையே வரும் 13ம் தேதியுடன் சட்டப்பேரவை நிறைவடைய உள்ள நிலை, இன்று சட்டப்பேரவை காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.