கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு.
2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கவுள்ளார். திருச்சியை சேர்ந்த ஐ.சண்முகநாதன் 1953-ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறார்.
இதுபோன்று, கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது இந்த ஆண்டு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது, ரூ.10 லட்சம் பரிசுதொகையும் நாளை கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ளது. திருவாரூரை சேர்ந்த ஆரூர்தாஸ் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நீண்ட காலம் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node