ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவு.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் கூறியதால் வேலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த, 2020-ல் சிறையில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விரைவாக விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு ஆணையிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் வழக்கை ரத்து செய்யக்கோரியும் முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.