#BREAKING: கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் குறைப்பு – மசோதா தாக்கலானது!

The bill was introduced in the legislature to reduce the term of office of co-operative executives.

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றன.

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டாக குறைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்நிலையில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

சட்டத்திருத்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக் காலம் 5 லிருந்து 3 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மசோதாவால் 2018ல் அதிமுக ஆட்சியில் தேர்வான கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிகிறது. மேலும், தனி அலுவலர்களின் பதவி காலமானது 2021 டிசம்பர் 31 ஆம் தேதியன்று முடிவடைவதால், தனி அலுவலர்களின் பதவி காலம் 2022 ஜீன் 30 வரை நீட்டித்து சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.