நாளை வெளியாகவுள்ளது தர்பார் படம்.
தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் தின விடுமுறையை கணக்கிட்டு நாளை (ஜனவரி மாதம் 9ஆம் தேதி) வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்நிலையில் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ,அனைத்து திரையரங்கிலும் 4 நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி சிறப்பு காட்சிக்கு அனுமதி 9, 10, 13, 14 ஆகிய 4 நாட்களுக்கு மட்டும் தர்பார் பட சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.