கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் பணியிடை மாற்றம்.
தனியார் பள்ளி மாணவி மரணம், இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி எஸ்பிஐ செல்வகுமார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்பியாக நியமனம் செய்து உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
unknown nodeமேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்த மாற்றத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
unknown node