#BREAKING: நமக்கு நாமே திட்டம் – அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

Government of Tamil Nadu has allocated Rs. 100 crore for the Namakku Naam project in rural areas.

ஊரகப்பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதில், நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கே நாமே திட்டம் ரூ.100 கோடியில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. ஊரகப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது.