#BREAKING: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை – தலைமைச் செயலாளர் மாலை ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசனை.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசனை.

சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது. துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார் எனவும் தகவல் கூறப்பட்டது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து அரசின் முக்கிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.