#BREAKING: தரமான பொங்கல் பரிசு தொகுப்பு – முதலமைச்சர் அறிவுறுத்தல்!

Chief Minister Stalin's instruction to ensure that everyone gets a quality Pongal gift.

அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.

மக்கள் அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாக சென்று நியாயவிலை கடைகளில் ஆய்வு செய்தேன். மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த திட்டத்தை சிலர் தவறான விஷத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றன. எனவே, இந்த பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு பொருட்கள் எந்தவித புகார் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே தமிழக அரசின் சார்பில் அரிசி பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

unknown node