#Breaking: பொங்கல் தொகுப்பில் கரும்பு – வழக்கு ஒத்திவைப்பு!
தமிழக அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணையை திங்கட்கிழமை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிட கோரிய வழக்கு ஜனவரி 2-ஆம் தேதி திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.
அரசு கொள்முதல் செய்யாததால் குறைந்த விலைக்கு கரும்புகளை விற்க வேண்டிய சூழல் வரும் என மனுதாரர் கூறியுள்ளார். இதனால், கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, பொங்கலையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால் பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்றுள்ளார்.