#BREAKING: வரும் 5-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்.!

The meeting of the Tamil Nadu Legislative Assembly will be held till February 5.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்.5-ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு நாளை பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.