சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று பணிஓய்வு பெற உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
unknown nodeசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் கொள்கை முடிவு என்ற பெயரில் இதுபோன்று முடிவு எடுக்க முடியாது.சிறப்பு அதிகாரியாக, பொன்.மாணிக்கவேல் ஒராண்டுக்கு நியமனம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் என்றும் நீதிபதி மகாதேவன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.