முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் எதிரான வழக்கு வாபஸ் ..!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, காமராஜுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்.
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ரேஷன் அரிசி, தெருவிளக்கு எல்இடி விளக்குகள் மற்றும் திட்டங்களில் முறைகேடு செய்ததாகவும், அமைச்சர்களின் மீதான புகாரிகளில் விசாரணை நடத்த பொது செயலாளரிடம் அனுமதி பெற வேண்டுமென்ற அரசாணையையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் சபாநாயகர் அப்பாவு வழக்குகளை திரும்பப் பெற்றார். சபாநாயகர் அப்பாவு வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து 3 வழக்குகளும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.