கொரோனா தொற்று குறைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புகிறது -உத்தரபிரதேச முதல்வர்!

Uttar Pradesh Chief Minister has said that corona infection is under control in the state. He also said that normalcy has returned to the state.

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்கு உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. அதுபோல உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவுகள் கடமையாக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தற்பொழுது தினசரி தொற்று 500-க்கும் கீழ் குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், உத்தரப்பிரதேசத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தற்போது மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது, ஆனால் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், சிறிய அளவு அலட்சியம் கூட பேரழிவுகளை ஏற்படுத்த கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.