கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாயாருக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி.!!

நெல்லை கவின் கொலை வழக்கில் ஏற்கனவே சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தாயாரான எஸ்.ஐ கிருஷ்ணகுமாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Kavin Case

சென்னை :நெல்லை ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாகக் கருதப்படும் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணவேணிக்கு (கிருஷ்ணகுமாரி) சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கவின், தூத்துக்குடி மாவட்டம் அருமுகமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் கவின், சுர்ஜித்தின் மூத்த சகோதரி சுபாஷினியுடனான காதல் கொண்டதன் காரணமாக கடந்த ஜூலை 27 அன்று பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் (சப்-இன்ஸ்பெக்டர்) ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சுர்ஜித் குண்டர் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கவினின் குடும்பத்தினர், கிருஷ்ணவேணியையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, உடலை வாங்க மறுத்து முன்னதாக ஐந்து நாட்கள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கிருஷ்ணவேணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தற்போது குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.