பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது டிஜிபி அலுவலகம்.
unknown nodeவாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக புகார் அடிக்கடி வந்த வண்ணம் இருந்தது.வாட்ஸ் ஆப்பில் அதிக நேரத்தை காவலர்கள் செலவழிப்பதாக வந்தபுகாரை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் இருந்து காவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.முக்கியமான நேரங்களில் காவலர்கள் செல்போனில் மூழ்கி உள்ளனர். உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம் என்றும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது டிஜிபி அலுவலகம்.