தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

The Chennai Meteorological Department has forecast showers in Tamil Nadu for the next four days Moderate rain

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்தது, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் 4 நாட்களுக்கு வறண்ட நிலை நிலவும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மாலத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு கடற் பகுதிகளில் காற்று 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வரை வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.