சென்னை :தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. எனவே, தொடர்ச்சியாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்ததும் வருகிறது.
அந்த வகையில், தற்போது தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது, 4 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.
அதன்படி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node