தமிழகத்தின் 37-வது மாவட்டமாக உதயமானது செங்கல்பட்டு – புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது . புதிய மாவட்டத்திற்கான தொடக்க  விழா செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது .புதிய மாவட்டத்திற்கான தொடக்க  விழா செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு எஸ்.பி.யாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

செங்கல்பட்டு வருவாய் கோட்டங்கள் :

செங்கல்பட்டு

மதுராந்தகம்

தாம்பரம்

செங்கல்பட்டு தாலுகாக்கள்:

செங்கல்பட்டு

மதுராந்தகம்

செய்யூர்

திருப்போரூர்

தாம்பரம்

திருக்கழுக்குன்றம்

பல்லாவரம்

வண்டலூர்