சென்னை : திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்பார்ப்பு கேள்விக்கு பதிலளித்தார்.அவர் கூறியதாவது:“2026 தேர்தலில் விஜய் ஓட்டைப் பிரித்துவிடுவார், தனிப்பெருமை எந்தக் கட்சிக்கும் வராது, எனவே கூட்டணி ஆட்சிக்குத்தான் வாய்ப்பு என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் வரலாற்றை சரியாகப் படிக்கவில்லை.
2006ஆம் ஆண்டில் தான் அவர்கள் நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் கொஞ்சம் முன்னால் போக வேண்டும். முன்னால் போனால் 1971ஆம் ஆண்டு இருக்கிறது. அந்த 1971ஆம் ஆண்டில் 184 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக வரலாறு படைத்தது. ‘ஐயோ போயிட்டாரு, போயிட்டாரு... திமுக ஆட்சி வராது’ என்று ஆரவாரம் செய்தவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் ஓடிவிட்டார்கள்.
‘துண்டை காணோம், துணியை காணோம்’ என்ற நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. மே 4ஆம் தேதிக்குப் பிறகு, இதே இடத்தில் அவர்கள் மீண்டும் வருவார்கள். தியாகராயருக்கு திராவிட ஆட்சி மாலை இடும். அதுதான் அந்த மாலை. மீண்டும் ஸ்டாலின் கோட்டை என்பதுதான் அந்த மாலை. அதுதான் சிறப்பானது.
அதை இந்த ஆண்டில் விரைவாகக் காண்பீர்கள்.சென்னை கோட்டை திமுக கூட்டணிக்கு.மனக் கோட்டை மற்ற அணிகளுக்கு.”எனவும் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடந்து தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
