இந்தியாவில் இருக்கும் நகரங்களில் தரமான வாழ்க்கைக்கான நகரத்தில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் வாழ தகுதி வாய்ந்த நகரங்களை டெல்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் வெளியிட்டுள்ளது. இதன் தரவரிசையில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. மேலும், தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஆய்வு முடிவில் இந்தியாவில் வாழத்தகுதி வாய்ந்த 10 நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதனை வாழ்க்கை தரம்(35 புள்ளிகள்), பொருளாதார திறன்(15 புள்ளிகள்), நிலைத்தன்மை(20 புள்ளிகள்) மற்றும் மக்களின் எண்ணம்(30) இவற்றின் அடிப்படையில் தயாரித்துள்ளனர். இந்த 100 புள்ளிகள் கொண்ட ஆய்வில் முதலிடத்தை கர்நாடகாவை சேர்ந்த பெங்களூரு நகரம் பெற்றுள்ளது.
எளிதான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் 66.7% பெற்றுள்ளது பெங்களூரு. இரண்டாம் இடமாக தமிழக தலைநகரம் சென்னை 62.61% பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சிம்லா, புவனேஷ்வர், மும்பை, டெல்லி, போபால், ராய்பூர், காந்திநகர், ஜெய்ப்பூர் ஆகியவை அடுத்த இடங்களை பிடித்துள்ளன. மேலும், இந்தியாவில் தரமான வாழ்க்கைக்கான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தை பெற்றுள்ளது.