50,000 பேருக்கு வேலைவாய்ப்பு..,தொழிற்சாலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்.!

தூத்துக்குடியில் நடைபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் அமையவுள்ள பல்வேறு நிறுவனங்களின் தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

CM MK Stalin -South District

தூத்துக்குடி :தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தத்தில் வியாட்னாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற எலக்ட்ரிக் கார் நிறுவனம் தனது தொழிற்சாலையை ரூ.1,119 கோடியில், 114 ஏக்கரில் அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரண்டு மாடல்களில் கார் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் விற்பனை தளத்தை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இங்கு ஆண்டுக்கு ரூ.1,600 கோடியில் 1.50 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையை  திறந்து வைத்த பின், மாணிக்கம் மஹாலில் நடைபெறும் பல்வேறு நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ.32,554 கோடி மதிப்பீட்டில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தென்மாவட்டங்களில் அமையவுள்ள பல்வேறு தொழிற்சாலைகளைத் திறந்து வைத்தார்.

பின்னர், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு Rising என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெயர் வைத்துள்ளார். இது பொறுத்தமான பெயர். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு Rising ஆக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முதன்மையாக கொண்டு, அதற்கான கட்டமைப்பை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. சென்னை, கோவை, தூத்துக்குடி, துபாய், ஜப்பான், அமெரிக்கா என பல இடங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார்.