,

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

By

கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில்இடைநிலை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். 

இன்று பழம்பெரும் வாய்ந்த சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த திட்ட பணிகளின் மதிப்பு 2.36 கோடியாகும்.

கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் செயல்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் செய்த கைவினை பொருட்கள், விவசாய பொருட்களை முதல்வர் பார்வையிட்டார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் அவர்கள் வென்ற பதக்கங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Dinasuvadu Media @2023