ஜெர்மனி :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார பயணமாக நேற்று (ஆகஸ்ட் 30) சென்னையில் இருந்து புறப்பட்டார்.
இன்றைய தினம் (ஆகஸ்ட் 31) ஜெர்மனியின் பெர்லின் நகரில் தரையிறங்கிய அவருக்கு, அங்கு வாழும் தமிழ் குடும்பங்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பெர்லின் நகரில் தமிழ் குடும்பங்களைச் சந்தித்த அவர், அவர்களின் அன்பு மற்றும் பாசத்தால் நெகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களின் குடும்பங்களை சந்தித்தேன். தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்,” என்று குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தின் சாதகமான அம்சங்களை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
unknown node