ராகுல் காந்தி நடத்தும் யாத்திரையில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக, ராகுல் காந்தி நடத்தி வரும் யாத்திரையில் வரும் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MK Stalin Rahul Gandhi

சென்னை :வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பீகாரில் நடத்தி வரும் யாத்திரையில் பங்கேற்கவுள்ளார்.

இந்த யாத்திரை, பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீதான வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடைபெறுகிறது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார், இதற்கு ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். இந்தப் போராட்டத்தில், மு.க. ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த யாத்திரையில், வரும் 27-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதேபோல் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.