எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர்,துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மாரியாதை

எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி  மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவனரும், முன்னாள்

எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி  மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் இன்று பிறந்த நாள் ஆகும்.இவர் ஜனவரி 17 ஆம்  தேதி 1917 ஆம் ஆண்டு பிறந்தார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர்-ன் 102ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று சென்னை இராயப்பேட்டையில் அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி  மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , கட்சியினர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்.

பின்னர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக  வளாகத்தில் நடைபெற்ற விழாவில், எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.