தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

பேராசிரியர்கள் ஸ்வென், ஷேரோன் நாதன், டேரியாவின் தமிழ் ஆர்வத்தை கண்டு மகிழ்ந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

CMStalinInEurope

ஜெர்மனி :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார கால வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது ஆகும்.

இவர் ஜெர்மனியில் தமிழ் உறவுகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஈவெரா படத்தைத் திறந்து வைப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது, ஜெர்மனியின்கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க ரூ.1.25 கோடியை வழங்கியதற்காக நன்றி தெரிவித்து முதலமைச்சரை ஜெர்மன் பேராசிரியர், தமிழில் வரவேற்றார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40,000 அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலை. தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.

தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே ரூ.1.25 கோடி வழங்கியது திமுக அரசு. நிதி வீணாகவில்லை என்பதை இங்குள்ள பேராசிரியர்களின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.

சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த ‘Cologne Library Visit’ அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node