முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் – செய்தியாளர்களை பயனாளிகளாக இணைத்து அரசாணை!

Government publication linking journalists as beneficiaries under the Chief Minister's Comprehensive Medical Insurance Scheme.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்தியாளர்களை பயனாளிகளாக இணைத்து அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம், தற்போது ரூ.72,000 ஆக உள்ளது.

பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node