சென்னையில் மேகவெடிப்பு – சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு.!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

WeatherUpdate - PradeepJohn

சென்னை :சென்னையில் நேற்றைய தினம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை பெய்த கனமழையால் மேகவெடிப்பு (Cloudburst) ஏற்பட்டதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அளவு மழைப்பொழிவு பதிவாகியதாகவும், இது சென்னையில் முதல் முறையாக மேகவெடிப்பு நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பல இடங்களில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர், மேலும் நான்கு விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

unknown node

சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. அதே போல் விம்கோ நகரில் – 23 செ.மீ, கொரட்டூரில் – 18 செ.மீ., கத்திவாக்கத்தில் – 14 செ.மீ., திருவொற்றியூரில் – 13 செ.மீ., கொடுங்கையூர் – 13 செ.மீ., பல்லாவரம் – 12 செ.மீ., தியாகராயநகர் – 12 செ.மீ மழை – வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே நேரம், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்றும் – நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.