விவசாயிகளுக்கான இழப்பீடு – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

Minister Senthil Balaji informed that the procedure for paying monthly electricity bills will come into effect soon.

மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டதில் இழப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே பேசிய அமைச்சர், மதுபானம் பார் டெண்டர் விவகாரத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை, வெளிப்படைத்தன்மையுடன் தான் டெண்டர் கோரப்பட்டது. டாஸ்மாக் பார் டெண்டர் எடுப்பது தொடர்பாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு விண்ணப்பத்தவர்களுக்கு முறையாக டெண்டர் நடைபெற்றது என்றும் தெரிவித்திருந்தார்.