இரண்டாவது நாளாக சென்னையில் 1,072 பேருக்கு கொரோனா .!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று புதிதாய் 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14,901 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 167 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,9,459 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,066 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!
July 1, 2025
போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
July 1, 2025