தமிழகத்தில் 11 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி.! முதலமைச்சர் தகவல்.!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,267-ஆக உயர்ந்துள்ளது.மேலும் தமிழக முதல்வர் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், தகவல்கள் என பலவற்றை தெரிவித்தார்.அதில், தமிழகத்தில் அரசு மருத்துவமனையை சேர்ந்த 6 பேருக்கும், தனியார் மருத்துவமனையை சேர்ந்த 5 பேருக்கும் சேர்த்து மொத்தம் 11 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தமிழக முதல்வர் தகவல் தெரிவித்தார்.