2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...! சென்னை வானிலை மையம்

2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை

2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட  அறிவிப்பில் , மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23% குறைந்துள்ளது. சென்னையில் இயல்பை விட 55% குறைவாக மழைப்பொழிவு இருந்துள்ளது என்று  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.