அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு! முதல்வருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகள் என்ன?

தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 10 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பதவியேற்ற 10.05.2026 அன்று தம்முடன் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறை ஒதுக்கீடுகளை பரிந்துரை செய்திருந்தார். அதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பல முக்கியத் துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவர் பொது நிர்வாகம், இந்திய நிர்வாக சேவை, இந்திய காவல் சேவை, இந்திய வன சேவை, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளை நேரடியாகக் கவனித்து வருகிறார்.அமைச்சர்கள் மற்றும்

ஒதுக்கப்பட்ட துறைகள்:

  • என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்
    (ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், கிராமப்புறக் கடன்பாடு, பாசனத் திட்டங்கள் மற்றும் சிறு பாசனத் திட்டங்கள்)
  • ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
    (பொதுப்பணிகள் - கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், விளையாட்டு மேம்பாடு)
  • டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் – சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்
  • கே.ஏ. செங்கோட்டையன் – நிதித் துறை அமைச்சர்
    (நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள்)
  • பி. வெங்கடராமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர்
    (உணவு மற்றும் பொதுவிநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு)
  • ஆர். நிர்மல்குமார் – மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர்
    (மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் தடுப்பு, சட்டமன்றம், ஆளுநர் அலுவல்கள், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்)
  • ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்
    (பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் வளர்ச்சி, கலாசாரம், தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம், ஒளிப்பதிவுச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம்)
  • டாக்டர் டி.கே. பிரபு – இயற்கை வளத் துறை அமைச்சர்
    (கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்)
  • செல்வி எஸ். கீர்த்தனா – தொழில்துறை அமைச்சர்
    (தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு)

இந்தத் துறை ஒதுக்கீடு, புதிய தவெக அரசு தனது ஆட்சியை முழுமையாக செயல்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.