சென்னை :வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல் உருமாறினால், அந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது எனவும் முன்னதாகவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துவிட்டது.
இதன் காரணமாக இன்று (நவ.26) முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டு வருகிறது.
அதன்படி, தற்போது கொடுத்த தகவலின் படி தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வருவதாக கூறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் மையம் கொண்டு திருகோணமலைக்கு தென்கிழக்கே கி.மீ., 570 கி.மீ நாகப்பட்டினத்திற்கு தென்-தென்கிழக்கு, புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 680 கி.மீ மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கே 770 கி.மீ நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.அதன்பின், வட-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை ஒட்டி, இலங்கை கடற்கரையை அடுத்த 2 நாட்களில் நகர்ந்து செல்லும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
unknown node