அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும்!!துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி

This news gives information about Deputy Chief Minister Panneerselvam confirmed

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.

அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இடம்பெறும்  என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.ஆனால் அந்த ஆலோசனையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.அதேபோல் இதற்காக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விஜயகாந்தை  சந்தித்தார்.ஆனால் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

unknown node

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்.06) சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த விழாவின் மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் சேர்த்து பேனர்கள் வைக்கப்பட்டது.ஆனால் இன்று காலை சென்னையில் வைக்கப்பட்ட பேனர்களில் தேமுதிகவின் படம் இல்லை.  இந்நிலையில்  விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற்றது.

அதேபோல் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

unknown node

இந்நிலையில்  அதிமுக பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது.அதிமுக கூட்டணியில் த.மா.கா – ஜி.கே.வாசன் புகைப்படமும் விழா மேடையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இது தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில்,அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இடம்பெறும்  என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.