மக்களவை தொகுதியில் போட்டியிட தினகரன் மறுத்து விட்டார்- தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட தினகரன் மறுத்து விட்டார் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். ttv dinakaran election

அதிமுக-பாமக –பாஜக கூட்டணி  முடிவானது.

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட தினகரன் மறுத்து விட்டார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து  தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட தினகரன் மறுத்து விட்டார். அதிமுக, பாஜக, பாமக சந்தர்ப்பவாத கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் .மக்கள் விரும்பும் கூட்டணியை அமமுக அமைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக  கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்