தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 18 பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று அதிமுகவின் மைத்ரேயன் எம்.பி பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.நேற்று தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.எம்எல்ஏக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அறிவுரை வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
unknown nodeஇதன் பின்னர் நேற்று இரவு குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ விடுதிக்கு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வந்தனர்.
பின் அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தற்போது குற்றாலத்தில் இருந்து கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், 2 நாட்கள் குற்றாலம் ரிசார்ட்டில் தங்கிவிட்டு 3ஆவது நாள் சென்னைக்கு சென்றுவிடுவோம் .தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் புனித நீராடிவிட்டு குற்றாலத்தில் ஓய்வெடுப்போம்.குற்றாலத்தில் தற்போது 20 பேர் உள்ளோம். இன்னும் 2 பேர் வந்து விடுவார்கள் என்று அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
unknown nodeஇதன் பின் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்திலிருந்து புனித நீராட பாபநாசம் புறப்பட்டு சென்றனர்.மகாபுஷ்கர விழாவின் நிறைவு நாளான இன்று, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புனித நீராடினார்கள்.
unknown nodeஇந்நிலையில் அதிமுகவின் மைத்ரேயன் எம்.பி 18 எம்எல்ஏக்கள் வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தகுதி நீக்க எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைப்பது அவர்களது சொந்த விருப்பம். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
unknown node18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தீர்ப்பு சத்தியத்திற்கு கட்டுப்பட்ட தீர்ப்பாக இருக்கும், சத்தியம் எங்கள் பக்கம் உள்ளது என்றும் மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.