நெருங்கும் தீபாவளி..ரூ.95,000-ஐ கடந்தது உச்சம் தொட்ட தங்கம் விலை!

தங்கம் விலை சவரன் 95 ஆயிரம் ரூபாயை கடந்த‌து புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், நகை வாங்கும் நகைபிரியர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளார்கள்.

today GOLD PRICE

சென்னை :தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்தே தங்க விலை அச்சமூட்டும் வகையில் உயர்ந்து வருகிறது. சாமானிய மக்களின் ஆசைப் பொருளாக இருந்த தங்கம், இப்போது ரூ.1 லட்சத்தை நெருங்கி, நகை பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு கிராம் ரூ.12,000-ஐ தொட முயல்கிறது, இது திருமணங்கள், பிறந்த நாள்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் குடும்பங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

உலக சந்தை அழுத்தங்கள், இந்தியாவில் திருமண சீசன் மற்றும் பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்த ஏற்றம் தொடர்கிறது. வாங்குவோரின் எதிர்பார்ப்பு ஒன்றே – விலை எப்போது இறங்கும்? என்பது தான்.

நேற்று (அக்டோபர் 15, 2025) சென்னை தங்கச் சந்தையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.11,860-ஆகவும், சவரனுக்கு (8 கிராம்) ரூ.280 ஏற்றம் – ரூ.94,880-ஆகவும் விற்பனையானது. இது, முந்தைய நாட்களின் ஏற்றத்தைத் தொடர்ந்து, சந்தையை மேலும் சலசலப்படுத்தியது.

நகைக்கடை உரிமையாளர்கள், “இந்த விலை ஏற்றம் தற்காலிகமானது, ஆனால் பண்டிகைக்கு முன் வாங்குவோரை கவனமாக இருக்கச் சொல்கிறோம்” என்று அறிவுறுத்தினர். கடந்த வாரம் சவரன் விலை ரூ.92,000-ஐ தாண்டியது, இப்போது ரூ.95,000-ஐ நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 16, 2025) விலை மேலும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.11,900-ஆகவும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.95,200-ஆகவும் விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.9,830-ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்தும்  ரூ.78,640-ஆகவும் உள்ளது.  அதைப்போல, வெள்ளி விலையும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.206-ஆகவும், கிலோவுக்கு ரூ.2,06,000-ஆகவும் விற்பனை. இந்த ஏற்றம், முதலீட்டாளர்களை ஈர்க்கலாம், ஆனால் சாதாரண வாங்குவோருக்கு சுமையாக உள்ளது.