திமுகவும், தேமுதிகவும் ஒட்டவே ஒட்டாது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

DMK and DMDK do not stick to it - Minister RP Uthayakumar

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும், தண்ணீரும் போன்றது, ஒட்டவே ஒட்டாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

unknown node

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அதிமுக அமைத்துள்ளது ராஜ்ய கூட்டணி, திமுக கூட்டணி ஜீரோ, இதனோடு எது சேர்ந்தாலும் ஜீரோதான்.திமுகவும், தேமுதிகவும் எண்ணெயும், தண்ணீரும் போன்றது, ஒட்டவே ஒட்டாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.