திமுகவும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி -மு.க.ஸ்டாலின்

தஞ்சையில்  திராவிடர் கழக மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,மக்களின் வாக்குகளை பெற 10% இடஒதுக்கீட்டை தந்திரமாக பயன்படுத்துகிறார். பிரதமர் மோடி

தஞ்சையில்  திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது.

திமுகவும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

தஞ்சையில்  திராவிடர் கழக மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,மக்களின் வாக்குகளை பெற 10% இடஒதுக்கீட்டை தந்திரமாக பயன்படுத்துகிறார். பிரதமர் மோடி பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை குழி தோண்டி புதைப்பதாகும் .

திமுகவும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி. எத்தனை காவிகள் வந்தாலும், எத்தனை மதக்கட்சிகள் வந்தாலும் திராவிடத்தை வீழ்த்த முடியாது.

சமூக நீதியை காப்பாற்ற மாநாடு மட்டுமல்ல போராட்டமும் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் வருவார் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.