நேரத்திற்கு ஏற்றார் போல் நிறத்தை மாற்றும் திமுக – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Former minister Jayakumar has accused the DMK government of tarnishing the image of the AIADMK.

அதிமுகவை களங்கப்படுத்தவே திமுக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேரத்திற்கு ஏற்றார் போல் நிறத்தை மாற்றுவதில் திமுவினர் திறமையானவர்கள். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் பெரும்பாலும் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதிமுக நற்பெயரை களங்கப்படுத்தவே திமுக அரசு முழு மூச்சாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். திமுக அரசின் செயல்பாடு பச்சோந்தி தனமாக இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

பொதுவெளியில் மத்திய அரசை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் திமுக, அரசின் செயல்பாடுகளால் ஆட்சி கவிந்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றசாட்டினார்.