அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும்!அமைச்சர் சர்ச்சை கருத்து!தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

This news gives information about DMK complains to Election Commissioner

மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என ஜெயக்குமார் கூறியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக புகார் அளித்துள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் -மதிமுக – விசிக – மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது.

அதேபோல்  அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம், – புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேற்று மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தார்.அதில் நதிநீர் இணைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இரட்டை இலைக்கு, அதிமுகவுக்கு வாக்களித்தால் மாதம் ரூ.1,500 கிடைக்கும் என்று தெரிவித்தார்.

unknown node

இந்நிலையில் அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என ஜெயக்குமார் கூறியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக புகார் அளித்துள்ளது.