திமுக-காங் கூட்டணி வெற்றியை தடுக்க பாஜக_வுடன் கூட்டணி…தம்பிதுரை கருத்து…!!
- பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார் அதிமுகவின் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை .
- திமுக_ காங் கூட்டணி வெற்றியை தடுப்பதற்க்காக அதிமுக-பாஜக கூட்டணி என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.
இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து , கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசும்போது மக்களின் பணத்தை கொள்ளையடித்த திமுகவும் இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கைக்கு உதவிய காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வர கூடாது என்பதற்க்காக கூட்டணி அமைத்துள்ளோம் என்று தம்பிதுரை தெரிவித்தார்.