ஊழலின் ஒட்டு மொத்த உருவமே திமுகதான் – அமைச்சர் ஜெயக்குமார்

The AIADMK government is running a corrupt administration. Minister Jayakumar has retorted that the DMK is the epitome of corruption.

ஊழலற்ற நிர்வாகத்தை அதிமுக அரசு நடத்துகிறது. ஊழலின் ஒட்டு மொத்த உருவமே திமுக தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவதுதான் எதிர்க்கட்சியின் வேலை என்றும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.

குடிமாமரத்து பணியில் அரசு சாதனை செய்யவில்லை. ஊழல் தான் செய்து வருகின்றனர். நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன் என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ஊழலற்ற நிர்வாகத்தை அதிமுக அரசு நடத்துகிறது. ஊழலின் ஒட்டு மொத்த உருவமே திமுக தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.